இந்தியா, ஜிம்பாப்வே யார் வேண்டுமானாலும் டி20 தொடரை வெல்லலாம்: சிக்கந்தர் ராஸா
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு சவாலளிப்போம் என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு சவாலளிப்போம் என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நிறைவடைந்ததையடுத்து, இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் நாளை மறுநாள் (ஜூலை 23) தொடங்குகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் டி20 தொடரை வெல்ல இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இரண்டு அணிகளுக்குமே சமமான வாய்ப்பு இருப்பதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் டி20 தொடரை வெல்ல இரண்டு அணிகளுக்குமே சமமான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஜிம்பாப்வே அணி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். இந்தியாவுக்கு எதிரான இந்த டி20 தொடர் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும். இந்திய கிரிக்கெட் மாற்றத்தை சந்தித்து வருகிறது. அணியில் புதிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதனால் இந்த தொடர் கண்டிப்பாக சுவாரசியமாக இருக்கும் என்றார்.
அண்மையில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி அதனை முழுமையாக இழந்தது. அதன் பின், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது.
டி20 தொடர்கள் மட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், இன்னும் ஒரு போட்டியில் கூட இந்திய அணியை வெற்றிபெறச் செய்யவில்லை.
அடுத்தடுத்து தொடர்களை இழந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லும் முனைப்பில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி உள்ளது.
Zimbabwe captain Sikandar Raza has stated that the team will put up a strong challenge and perform well in the T20 series against India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.