2-வது டி20: முதல் முறையாக டாஸில் தோற்ற ஷ்ரேயாஸ் ஐயர்; ஜிம்பாப்வே பந்துவீச்சு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 25) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
ஜிம்பாப்வே அணியின் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அசோக் சர்மாவுக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் யஷ் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, தொடர்ச்சியாக 8 போட்டிகளில் டாஸில் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், முதல் முறையாக இன்று டாஸில் தோல்வியடைந்தார்.
Zimbabwe won the toss and elected to bowl in the second T20 match against India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.