FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியா - நியூசி. கடைசி ஒருநாள்: சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித், கோலி!

இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர்களான ரோஹித், கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து...

11 வினாடிகள் முன்பு
விராட் கோலி - ரோஹித் சர்மா. - படம்: ஏபி
பகிர்:

இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தமர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் கடைசி ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

மவுண்ட் மாங்கனு பே ஓவலில் திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க மற்றும் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா 7 ரன்களுக்கும், விராட் கோலி 5 ரன்களுக்கும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

மேலும், ருதுராஜ் கெய்க்வாட் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க 13 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்களுடன் அக்க்ஷர் படேல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இந்தத் தொடரை வெல்லும் கட்டாயத்தில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

In the final ODI between India and New Zealand, opening batsmen Rohit Sharma and Virat Kohli were dismissed for low scores.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.