FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிஎஸ்கேவின் பயிற்சியாளராக ரூ.20 கோடி கேட்கும் இயான் மார்கன்..! ஹஸி தேர்வு ஆகாதது ஏன்?

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான பரிந்துரையில் முன்னணியில் இருப்பவர்கள் இருப்பது குறித்து...

9 செப்டம்பர் 2026, 1:02 pm IST
இயான் மார்கன், மைக்கேல் ஹசி - படங்கள்: ஏபி
பகிர்:

சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளராக இயான் மார்கன் செயல்பட இருப்பதற்கு அவர் ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கேவின் நெடுநாள் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் 2009 முதல் 2026 வரை பணியாற்றினார். இதில் தோனி தலைமையில் 5 கோப்பைகளும் வென்ற இவர் அவர் இல்லாத மூன்று சீசன்களிலும் பிளே ஆஃப் கூட தகுதிபெறாதது விமர்சனங்களை எழுப்பியது.

பின்னர், ஸ்டீஃபன் பிளெமிங் ராஜிநாமா செய்தார். இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது, சிஎஸ்கே அணிக்கு யார் தலைமைப் பயிற்சியாளராக வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

மெக்கல்லம், தோனி என யார் யார் பெயர்களோ அடிப்பட்டு வந்த நிலையில், தற்போது முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பெயர் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

இவர் சர்வதேச அளவில் பெரிதாக பயிற்சியாளராக இல்லாவிட்டாலும் அவரது தலைமையில் இங்கிலாந்து அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரிலும் இறுதிப் போட்டி வரைக்கும் அணியை வழிநடத்தியுள்ளார்.

இந்த நிலையில், அவர் ரூ.18 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதால் சிஎஸ்கே சற்று அதிருப்தியில் இருக்கிறதாகவும் அது குறித்து பரீசிலனையில் இருப்பதாகவும் ஆங்கில ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி அடுத்த பயிற்சியாளராக மாற்றலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், புதியவர் ஒருவர் வந்தால் அணிக்கு உற்சாகமாக இருக்குமென நிர்வாகம் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் எனவும் இதுவரை அவர் ஆலோசகர், பயிற்சியாளர என்ற எந்தப் பொறுப்பையும் வகிக்க முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

summary

Eoin Morgan demands ₹20 crore for CSK head coach role, Why wasn't Hasi selected?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments