FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி முதலிடம் பிடித்த ஜோ ரூட் குறித்து...

13 செப்டம்பர் 2026, 1:09 pm IST
ஜோ ரூட் - படம்: ஏபி
பகிர்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபீல்டராக இருந்து அதிக கேட்ச்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என தொடரை முழுமையாக வென்றது. இதில் கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டனில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் குவித்து வலுவான முன்னிலை பெற்றது.

Advertisement

Advertisement

பின்னர் இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 4349 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 130/2 ரன்கள் எடுத்து வென்றது. இந்தப் போட்டியில் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 9 ரன்களும் இரண்டாவது இன்னிக்ஸில் 62* ரன்களும் எடுத்தார். இதன் மூலமாக சச்சின் சாதனையையும் முறியடித்தார்.

இதே போட்டியில் ஃபீல்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கேட்ச் எடுத்து ஸ்டீஸ் ஸ்மித்தை முந்தினார். முன்னதாக, இருவரும் 219 என சமநிலையில் இருந்தார்கள். ஸ்மித் குறைவான போட்டிகளில் சமன் செய்ததால் முதலிடத்தில் இருந்தார். தற்போது ஜோ ரூட் இதனை தன்வசமாக்கியுள்ளார்.

டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகள்

1. ஜோ ரூட் - 220 (169 போட்டிகளில்)

2. ஸ்டீவ் ஸ்மித் - 219 (125 போட்டிகளில்)

3. ராகுல் திராவிட் - 210 (164 போட்டிகளில்)

4. மஹிலா ஜெயவர்தனே - 205 (149 போட்டிகளில்)

5. ஜாக் காலிஸ் - 200 (166 போட்டிகளில்)

summary

Joe Root overtakes Steve Smith to claim the top spot in test cricket fielding

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments