தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சு!
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது குறித்து...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டி இன்று (செப்.24) ஹாலிவுட்பெட்ஸ் கிங்ஸ்மீட் கிரிக்கெட் திடலில் நடைபெறுகிறது. இதில் ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த நான்கு ஐந்து ஒருநாள் தொடர்களில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ள ஆஸ்திரேலிய அணி பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டோனி டி சோர்சி, டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ரியான் ரிக்கல்டன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, பியோர்ன் ஃபோர்டுயின், கேசவ் மகாராஜ்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்) , டிராவிஸ் ஹெட், கூப்பர் கானலி, ஜோஷ் இங்லிஸ், மாட் ரென்ஷா, கேமரூன் கிரீன், ஜாக் எட்வர்ட்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
Australia to bowl in the first ODI against South Africa!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.