FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தென்கொரியாவின் சங்வோன் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் 25 மீ பிஸ்டல் பிரிவில் 16 வயதே ஆன உதயவீர் சிங் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
மேலும் இதே பிரிவு அணிகள் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது.
உதயவீர் சிங் 587 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். அமெரிக்காவுக்கு வெள்ளி, கொரியாவுக்கு வெண்கலம் கிடைத்தன.
மேலும் அணிகள் பிரிவில் 1736 புள்ளிகள் குவித்து இந்தியா தங்கம் வென்றது. சீனா 1730, கொரியா 1721 புள்ளிகளுடன் வெள்ளி, வெண்கலம் வென்றன.
9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 24 பதக்கங்கள் வென்று இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. மேலும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முதல் தேர்வுப் போட்டியான இதில் 2 வாய்ப்புகளையும் இந்தியா பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments