FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிஎஸ்ஜி கோப்பை: சென்னை வருமான வரித் துறை சாம்பியன்

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சென்னை வருமான வரித் துறை அணி வெற்றி பெற்று பி.எஸ்.ஜி. கோப்பையைத் தட்டிச் சென்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
வருமான வரித் துறை அணிக்கு பி.எஸ்.ஜி. கோப்பையை வழங்குகிறார் கோவை மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா. 
பகிர்:


கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சென்னை வருமான வரித் துறை அணி வெற்றி பெற்று பி.எஸ்.ஜி. கோப்பையைத் தட்டிச் சென்றது.
இறுதிச் சுற்றில் சென்னை வருமான வரித் துறை, பெங்களூரு விஜயா வங்கி அணிகள் வியாழக்கிழமை மாலை விளையாடின. இதில் சென்னை வருமான வரித் துறை அணி 82-78 என்ற புள்ளிகள் கணக்கில் விஜயா வங்கி அணியை வீழ்த்தி, பி.எஸ்.ஜி. கோப்பையை வென்றது.
முன்னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணி 82-70 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் ரயில்வேயை தோற்கடித்தது.
முதலிடம் பிடித்த அணிக்கு கோப்பையுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2ஆவது இடம் பிடித்த அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், சிறந்த விளையாட்டு வீரருக்கான ரூ.10 ஆயிரம் பரிசை வருமான வரித் துறை அணியின் வீரர் ஜீவா பெற்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா, தொழிலதிபர் ஜி.சீனிவாசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. விளையாட்டுக் கழகத் தலைவர் ருத்ரமூர்த்தி, செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments