ஆசியக் கோப்பையை வென்ற அணிகளின் பட்டியல்
இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கோப்பைப் போட்டியை இதுவரை வென்ற அணிகள்
1984 - இந்தியா
1986 - இலங்கை
1988 - இந்தியா
1991 - இந்தியா
1995 - இந்தியா
1997 - இலங்கை
2000 - பாகிஸ்தான்
2004 - இலங்கை
2008 - இலங்கை
2010 - இந்தியா
2012 - பாகிஸ்தான்
2014 - இலங்கை
2016 - இந்தியா
2018 - இந்தியா
Advertisement
Advertisement
2022 போல 2016-ல் ஆசியக் கோப்பைப் போட்டி டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு டி20 போட்டியாக நடைபெற்றது. அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டி 50 ஓவர் போட்டியாக நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.