இரண்டு ஆட்டங்களை வைத்து ராகுலை நீக்க முடியாது: இந்திய பேட்டிங் பயிற்சியாளர்
இந்திய தொடக்க பேட்டர் ராகுலின் மோசமான இரண்டு ஆட்டங்களை வைத்து அவரை அணியிலிருந்து நீக்க முடியாதென பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இந்திய தொடக்க பேட்டர் ராகுலின் மோசமான இரண்டு ஆட்டங்களை வைத்து அவரை அணியிலிருந்து நீக்க முடியாதென பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
நாளை (ஞாயிற்றுக் கிழமை) தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா விளையாட உள்ளது. தொடக்க பேட்டர் கே.எல்.ராகுல் மோசமாக விளையாடி வருகிறார். பாகிஸ்தானுடன் 2 ரன்களுக்கும், நெதர்லாந்துடன் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். அவரைக் குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியதாவது:
ராகுலுக்கு பதிலாக (ராகுலுக்கு பதில் ரிஷப் பந்த்) யாரையும் மாற்றம் செய்ய விரும்பவில்லை. அவர் நன்றாகத்தான் விளையாடி வருகிறார். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாகவே விளையாடினார். இரண்டு ஆட்டங்கள் வைத்து மதிப்பிட முடியாது. அது மிகவும் குறைவான பரிசோதனையாகும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.