ஆசியக் கோப்பை: ஜடேஜா விலகல்!
ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார்.
ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளைத் தோற்கடித்த இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகியுள்ளார். இதையடுத்து மாற்று வீரராகத் தேர்வான அக்ஷர் படேல், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜாவின் காயத்தை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. இத்தகவலை பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஞாயிறன்று பாகிஸ்தான் அல்லது ஹாங்காங் அணியுடன் இந்திய அணி விளையாடவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.