3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும்: ஸ்டோக்ஸ் விருப்பம்
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று...
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. எலிசபெத் மறைவு காரணமாக லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. டெஸ்ட் குறித்த அடுத்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து முடிவெடுக்கவுள்ளன.
இந்நிலையில் ட்விட்டரில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: அவருக்கு (எலிசபெத்) விளையாட்டு பிடிக்கும். அவருடைய நினைவாக டெஸ்டில் விளையாடுவதை கெளரவமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
டெஸ்ட் தொடர் 1-1 எனத் தற்போது சமனில் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.