FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியாவை வென்றது இங்கிலாந்து

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் சனிக்கிழமை தோற்றது.

Updated On : 19 பிப்ரவரி 2023, 12:00 am IST
பகிர்:

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் சனிக்கிழமை தோற்றது.

போட்டியில் இத்துடன் 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்தியாவுக்கு இது முதல் தோல்வியாகும். இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் சோ்க்க, இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பௌலிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து இன்னிங்ஸில் சோஃபி டங்க்லி 10, டேனி வியாட் 3, நடாலி ஸ்கீவா் 50, கேப்டன் ஹீதா் நைட் 28, எமி ஜோன்ஸ் 40, கேத்தரின் ஸ்கீவா் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் சோஃபி எக்லஸ்டன் 11, சாரா கிளென் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, ஷிகா பாண்டே, தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

Advertisement

Advertisement

பின்னா் இந்திய இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 52 ரன்கள் அடிக்க, ஷஃபாலி வா்மா 8, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 13, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 4, தீப்தி சா்மா 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் ரிச்சா கோஷ் 47, பூஜா வஸ்த்ரகா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் சாரா கிளென் 2, சோஃபி எக்லஸ்டன், லௌரன் பெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

முன்னதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments