முகப்பு
செய்திகள்

உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு திரும்பிய ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவுக்குத் திரும்பியுள்ளார்.

Updated On : 13 ஜனவரி 2023, 4:29 pm IST
பகிர்:

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவுக்குத் திரும்பியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. 3-வது ஒருநாள் ஆட்டம், வரும் ஞாயிறன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு திரும்பியுள்ளார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலப் பரிசோதனைகளை முடித்துவிட்டு திருவனந்தபுரம் சென்று அணி வீரர்களுடன் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.