காலே டெஸ்ட்: பாகிஸ்தான் நிதான ஆட்டம் - 221/5
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 221/5 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். 15.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வந்தது. பின்னர் நிலைத்து ஆடிய ஆஞ்சலோ மேதிவ்ஸ், தனஞ்செய டி சில்வா ஜோடி 131 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்தார்கள்.
இதையும் படிக்க: 106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த ப்ராவோ! (விடியோ)
Advertisement
Advertisement
மேதிவ்ஸ் 61 ரன்களுக்கும் தனஞ்செய டி சில்வா ஜோடி 122 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 312 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது. ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரர் அஹமது தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையும் படிக்க: விம்பிள்டன் தோல்விக்குப் பிறகு ஜோகோவிச் கூறியது என்ன?
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 2ஆம் நாள் முடிவில் 221/5 ரன்கள் எடுத்துள்ளது. இடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமானது. ஷான் மசூத் 39 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் ஆஸம் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தற்போது களத்தில் ஷகீல் 69* ரன்களுடனும் அஹா சல்மான் 61* ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியை விட பாகிஸ்தான் அணி 91 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவப்படி இரு அணிகளும் சம பலத்தில் உள்ளது. 3வது நாள்தான் போட்டி யார் பக்கம் திசை திரும்பும் எனத் தெரியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.