FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமெரிக்காவிலும் அசத்தும் சூப்பர் கிங்ஸ்! 

எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் டிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

2 பிப்ரவரி 2024, 8:12 am IST
படம்: ட்விட்டர் | டிஎஸ்கே
பகிர்:

எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் ஜூலை 13 முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் அணிகளும் 3 அணிகளை விலைக்கு வாங்கி விளையாடுகிறது. அதில் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டிஎஸ்கே (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்), எம்ஐஎன்ஒய் (மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்), எல்ஏகேஆர் (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 

மேலும் அமெரிக்காவினை சேர்ந்த 3 அணிகளுமாக மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.  டிஎஸ்கே அணிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக செயல்படுகிறார். சிஎஸ்கே அணியில் பௌலிங் பயிற்சியாளர் ப்ராவோ இதில் பிளேயிங் லெவனில் விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

எஸ்எஃப்யூ அணி முதலில் பேட்டிங் செய்து 171 /8 ரன்கள் எடுத்தது. அதிகப்ட்சமாக வேட் 49(30)ரன்கள் அடித்தார். அடுத்து ஆடிய டிஎஸ்கே 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிலிந் குமார் 52(42) ரன்களும் டேனியல் சாம்ஸ் 42(18)ரன்களும் எடுத்து அசத்தினர். 

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்திய டேனியல் சாம்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

இந்த வெற்றியின் மூலமாக 6 புள்ளிகளுடன் டிஎஸ்கே அணி ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ப்ளே-ஆஃப் சென்ற அணியாக சிஎஸ்கே அணியே உள்ளது. அதே தரமான அணியாக டிஎஸ்கே அணியும் உருவாகியுள்ளதால் சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஜேஎஸ்கே அணியும் ப்ளே-ஆஃப் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments