FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸி. கேப்டன் விலகல்!

ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

7 பிப்ரவரி 2024, 12:10 pm IST
பகிர்:

ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 

தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ். இதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்று அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வர முடியாத சூழலால் 4-வது டெஸ்டையும் தவறவிடுகிறார் கம்மின்ஸ். இதனால் 4-வது டெஸ்டிலும் ஆஸி. அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

எனினும் முழு நேர கேப்டன் பொறுப்பில் தனக்கு விருப்பமில்லை எனக் கூறியுள்ளார் ஸ்மித். இந்தூர் டெஸ்டுக்குப் பிறகு அவர் கூறியதாவது: என்னுடைய காலம் முடிந்துவிட்டது. இது பேட் கம்மின்ஸின் அணி என்றார். கம்மின்ஸ் கேப்டனான பிறகு ஆஸி. அணிக்கு 4-வது முறையாகப் பொறுப்பேற்கவுள்ளார் ஸ்மித். 

டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாகத் தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. பணிச்சுமை காரணமாக ஐபிஎல் போட்டியிலும் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. ஜூன் மாதத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று, ஆஷஸ் தொடர் போன்ற முக்கியமான போட்டிகளில் கம்மிங்ஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments