ஐபிஎல் 2023: அதிக விக்கெட்டுகள் எடுத்த சிஎஸ்கே வீரர்!
ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார் சிஎஸ்கேவின் வேகப் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. மும்பை 20 ஓவர் முடிவில் 139/8 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணியின் வேகப் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் 2023இன் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பர்பிள் கேப் துஷார் தேஷ்பாண்டேவிடம் உள்ளது.
Advertisement
Advertisement
தற்போதைய நிலவரப்படி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:
துஷார் தேஷ்பாண்டே (சிஎஸ்கே) - 19
முஹமது ஷமி (குஜராத் ) - 18
ரஷித் கான் (குஜராத்) - 18
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.