பார்வையாளர்களே இல்லாத பாகிஸ்தான்-நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!
ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளின் பயிற்சி ஆட்டம் பார்வையாளர்களே இல்லாமல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8-ஆவது முறையாக சாம்பியனாகி இருக்கிறது இந்தியா. சொந்த மண்ணில் இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் உலகக் கோப்பை போட்டியில் களம் காண இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு இந்த சாம்பியன் கோப்பை உத்வேகம் அளிக்கும் என்பது முக்கியமானது.
இதையும் படிக்க: அணியில் தேர்வாகாதது குறித்து சஞ்சு சாம்சனின் வைரலாகும் பதிவு!
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் அணிகள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி செப்.29ஆம் நாள் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் ஹைதராபாத்தில் விளையாட இருக்கிறது.
Advertisement
Advertisement
அன்றைய தினத்தில் உள்ளூரில் திருவிழா நடைபெற இருப்பதால் இந்தப் பயிற்சி ஆட்டத்திற்கு பாதுகாப்பு குறைவு ஏற்படுமென பார்வையாளர்களே இல்லாமல் போட்டி நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ஆஸ்கருக்கு செல்லும் ஜவான்?: அட்லி கூறியது என்ன?
இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டம் இங்கிலாந்துடன் செப்.30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.