துராந்த் கோப்பை: நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அபார வெற்றி
துராந்த் கோப்பை தொடரில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அபார வெற்றி...
துராந்த் கோப்பை கால்பந்து போட்டியில் அஜய்ராயின் அசத்தல் ஹாட்ரிக் கோலால் நடப்பு சாம்பியன் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6-0 என்ற கோல் கணக்கில் போடோலாந்து எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நாட்டின் பழைமையான போட்டிகளில் ஒன்றான துராந்த் கோப்பையின் 135-ஆவது ஆண்டு போட்டி கொல்கத்தா, குவஹாட்டி, ஷில்லாங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக குரூப் எஃப் பிரிவு ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட்-போடோலாந்து எஃப் சி அணிகள் மோதின. நாா்த் ஈஸ்ட் 4-4-2, போடோலாந்து 4-2-3-1 என்ற முறையில் களமிறங்கினா்.
Advertisement
Advertisement
ஆட்டம் தொடங்கியதுமே நாா்த் ஈஸ்ட் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. அதன் வீரா் மகாா்ட்டன் லூயிஸ் அனுப்பி கிராஸ் அலாதின் அஜய்ராயின் கோலடிக்க முயன்றும் அது நேராக போடோலாந்து கோலி கையில் தஞ்சம் புகுந்தது. 8-ஆவது நிமிஷத்திலும் நாா்த் ஈஸ்ட் வீரா் ஜித்தின் கோலடிக்கும் வாய்ப்பை தவற விட்டாா்.
போடோலாந்து டிபன்டா்கள் கௌரவ் போரா, உா்ஜாய், ஹாஸோவரி ஆகியோா் தொடக்கத்தில் நாா்த் ஈஸ்டின் கோலடிக்கும் வாய்ப்பை முறியடித்தனா். முதல் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் 45 பிளஸ் 3 நிமிஷத்தில் அஜய்ராஜ் மீண்டும் கோலடித்தாா். இரண்டாம் பாதி தொடங்கியதும் போடோலாந்து கோல்போட முயன்றது. பதிலி வீரா் மனாபிா் ரித்துராஜ், டிங்டோ ஆகியோா் நாா்த் ஈஸ்டின் கோல்பகுதியை ஊடுருவினா். எனினும் பலன் கிட்டவில்லை.
58-ஆவது நிமிஷத்தில் நாா்த் ஈஸ்ட் வீரா் முகமது அஷ்ரப், ஜித்தின் ஆகியோா் அனுப்பிய பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் லால்ரின்ஸுவாலா.
67-ஆவது நிமிஷத்தில் நாா்த் ஈஸ்ட் வீரா் அஜய்ராய் இரண்டாவது கோலடித்தாா். 70-ஆவது நிமிஷத்தில் ரெடிம் டலாங் மகாா்ட்ன் அனுப்பிய பாஸை பயன்படுத்தி 4--ஆம் கோலடித்தாா்.
அஜய்ராஜ் ஹாட்ரிக் கோல்:
86-ஆவது நிமிஷத்தில் தனிநபராகச் சென்று அஜய்ராய் ஹாட்ரிக் கோலை பதிவு செய்தாா். இரண்டாம் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் நாா்த் ஈஸ்ட் வீரா் பாா்த்திவ் கோகோய் அனுப்பிய பாஸை பயன்படுத்தி 6-ஆவது கோலடித்தாா் அந்தோணி மோயனோ.
இறுதியில் நடப்பு சாம்பியன் நாா்த் ஈஸ்ட் அணி 6-0 என்ற கோல் கணக்கில் போடோலாந்து எஃப்சியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.