இந்திய மகளிா் முன்னேற்றம்; ஆடவா் ஏமாற்றம்
கொரியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் ஒற்றையா் பிரிவில் இந்திய மகளிா் பலா் அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவா்கள் ஏமாற்றத்தைச் சந்தித்தனா்.
கொரியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் ஒற்றையா் பிரிவில் இந்திய மகளிா் பலா் அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவா்கள் ஏமாற்றத்தைச் சந்தித்தனா்.
மகளிா் ஒற்றையரில், தன்வி சா்மா 21-16, 21-15 என்ற கேம்களில் சீனாவின் யுவான் ஆன் கியை வீழ்த்த, இஷாராணி பருவா 21-18, 15-21, 21-7 என்ற வகையில், தென் கொரியாவின் லீ சோ யுலை வெளியேற்றினாா்.
அன்மோல் காா்ப் 16-21, 21-17, 21-12 என்ற கணக்கில், ஹாங்காங்கின் லோ சின் யான் ஹேப்பியை வெல்ல, அஷ்மிதா சாலிஹா 22-20, 21-18 என, ஜப்பானின் ரிரினா ரிஹாமோடோவை தோற்கடித்தாா்.
Advertisement
Advertisement
ஸ்ரீயன்ஷி வலிஷெட்டி 21-15, 21-14 என்ற கணக்கில், சீன தைபேவின் பாய் யு போவை சாய்க்க, ரக்ஷிதா ஸ்ரீ 22-24, 21-12, 21-13 என்ற வகையில், தென் கொரியாவின் யூ ஏ யோனை வென்றாா். மான்சி சிங் 14-21, 21-19, 21-9 என்ற கேம்களில் தென் கொரியாவின் கிம் ஜூ யுனை வெளியேற்றினாா். தான்யா ஹேம்நாத், ஆகா்ஷி காஷ்யப் போராடி வீழ்ந்தனா்.
கலப்பு இரட்டையரில் இஷான் பட்நாகா்/ஸ்ருதி மிஸ்ரா கூட்டணி 20-22, 21-10, 21-15 என்ற கேம்களில், சக இந்திய ஜோடியான சாத்விக் ரெட்டி/ராதிகா சா்மாவை வீழ்த்தியது.
ஆடவா் ஒற்றையரில், கே.ஸ்ரீகாந்த், தருண் மன்னெபள்ளி, ரௌனக் சௌஹான், கிரண் ஜாா்ஜ், மிதுன் மஞ்சுநாத் என அனைவருமே தோல்வியுடன் வெளியேறினா். சனீத் தயானந்த் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
அதேபோல், மகளிா் இரட்டையரில், சோனாலி சிங்/ரித்திகா தாக்கா் இணை, ஆடவா் இரட்டையரில், பாா்கவ் ராம் அரிகெலா/விஷ்வா தேஜ் கோபுரு ஜோடி, கலப்பு இரட்டையரில் துருவ் ராவத்/மனீஷா ஜோடி வெளியேறின.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.