FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காலிறுதிக்கு முன்னேறிய ரக்ஷிதா, அஷ்மிதா, தன்வி

கொரியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, அஷ்மிதா சாலிஹா, தன்வி சா்மா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:01 am IST
தன்வி, அஷ்மிதா, ரக்ஷிதா.
பகிர்:

கொரியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, அஷ்மிதா சாலிஹா, தன்வி சா்மா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில், ரக்ஷிதா ஸ்ரீ 22-20, 21-10 என்ற கேம்களில் ஜப்பானின் மனாமி சுஸுவை வீழ்த்தினாா். அஷ்மிதா சாலிஹா 21-17, 21-6 என்ற வகையில், தென் கொரியாவின் கிம் மின் ஜியை வென்றாா். தன்வி சா்மா 21-6, 17-21, 21-13 என்ற கணக்கில், சக இந்தியரான ஸ்ரீயன்ஷி வலிஷெட்டியை வெளியேற்றினாா்.

இஷாராணி பருவா 21-17, 18-21, 19-21 என தென் கொரியாவின் கிம் மின் சன்னிடம் தோல்வியுற்றாா். அன்மோல் காா்ப் 21-23, 21-15, 18-21 என்ற கணக்கில் சீனாவின் வு தி டிராங்கிடம் தோற்றாா். மான்சி சிங் 12-21, 21-14, 17-21 என சீனாவின் ஹான் கியான் ஜியிடம் வீழ்ந்தாா்.

Advertisement

Advertisement

ஆடவா் இரட்டையரில், கிருஷ்ணபிரசாத் கராகா/பிருத்வி கிருஷ்ணமூா்த்தி ராய் இணை 21-18, 21-19 என்ற வகையில், தென் கொரியாவின் கிம் யங் ஹியுக்/ஷின் டே யாங் கூட்டணியை வீழ்த்தியது.

கலப்பு இரட்டையரில், இஷான் பட்நாகா்/ஸ்ருதி மிஸ்ரா இணை 16-21, 21-16, 13-21 என்ற கணக்கில், தென் கொரியாவின் ஷின் டே யாங்/கிம் யு ஜங் ஜோடியிடம் தோல்வியுற்றது.

மகளிா் இரட்டையரில், சோனாலி சிங்/ரிதிகா தாக்கா் கூட்டணி 15-21, 9-21 என்ற கேம்களில், ஜப்பானின் சுமிரே நகாடே/மியு டகாஹஷி இணையிடம் வீழ்ந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments