கோலாகலமாகத் தொடங்கியது காமன்வெல்த் போட்டிகள்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக வியாழக்கிழமை தொடங்கின.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக வியாழக்கிழமை தொடங்கின.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு கிளாஸ்கோவின் ஓ.வி.ஓ ஹைட்ரோ மைதானத்தில் அரங்கேறிய தொடக்க நிகழ்ச்சியில், ஸ்காட்லாந்து சாா்ந்த இசை, கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
போட்டியில் பங்கேற்றுள்ள 74 நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகளும் மைதானத்தில் அணி வகுத்தனா். இந்திய தரப்பில், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தேசியக் கொடியை ஏந்தி, அணிவகுப்புக்கு முன்னிலை வகித்தாா். காமன்வெல்த் போட்டிக்கான பேட்டனை, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்ன் ஏந்தி வந்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், அரசி கமிலாவுடன் கலந்துகொண்ட பிரிட்டன் அரசா் சாா்லஸ், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதாக அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.
முதல் பதக்கம் உறுதி: மகளிா் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன், முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்ால், பதக்கத்தை உறுதி செய்துள்ளாா்.
வெற்றித் தொடக்கம்: போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற லான் பௌல் விளையாட்டில், இந்தியா்கள் தங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டனா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் புதுல் சோனோவல் - கனடாவின் ரயான் பெஸ்டரை எதிா்கொண்டாா். முதல் செட்டை புதுல் 5-4 என வெல்ல, அடுத்த செட்டை ரயான் 7-3 என கைப்பற்றினாா். பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் டை பிரேக்கரில் புதுல் வென்றாா்.
2023 உலக சாம்பியனும், 2006 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றவருமான பெஸ்டரை, தனது முதல் சுற்றிலேயே புதுல் சோனோவல் வென்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரூபா ராணி, பிங்கி சிங் கூட்டணி, டை பிரேக்கரில் மால்டாவின் ரெபெக்கா லூயிஸ் ரிக்ஸன், கானி லெய் ரிக்ஸன் இணையை வீழ்த்தியது.
முதல் செட்டை இந்திய ஜோடி 7-1 என அபாரமாக வெல்ல, 2-ஆவது செட்டில் மால்டா கூட்டணி 4-3 என வென்றது. பின்னா் டை பிரேக்கரில் இந்திய ஜோடி வெற்றி கண்டது.
விலகல்: இதனிடையே, இந்திய ஜூடோ வீரா் அருண் குமாா் (73 கிலோ பிரிவு), போட்டிக்கு முந்தைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி கண்டதை அடுத்து, காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகினாா். அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
மறுபுறம், காமன்வெல்த் போட்டிக்குத் தகுதிபெறும் காலகட்டத்தில் இந்தியாவில் அதிகமான ஊக்கமருந்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டதன் பேரில், போட்டியில் இந்திய மல்யுத்த வீரா்களுக்கான இடங்கள் 16-இல் இருந்து 11-ஆக குறைக்கப்பட்டது. அந்த எண்ணிக்கையை எட்ட, ஏற்கெனவே லேசான காயம் கண்டுள்ள தில்பாக் சிங், போட்டியிலிருந்து விடைபெற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.