போலியோ பாதிப்பு, விடாமுயற்சி... கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் குறித்து...
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் ஜாண்டு குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவின் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகாரைச் சேர்ந்த ஜாண்டு குமார் (28 வயது) தனது சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். தற்போது, உலக அரங்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக வியாழக்கிழமை தொடங்கின.
Advertisement
Advertisement
ஜாண்டு குமார் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் 130.9 புள்ளிகளைப் பெற்று பதக்கத்தை உறுதிசெய்தார். இந்தப் போட்டியில் 181 கிலோ, 190 கிலோ பளுவைத் தூக்கினார். 196 கிலோ பளுவைத் தூக்கும்போது சற்று தவறிவிட்டார்.
இதே பிரிவில் மற்றுமொரு இந்தியரான சுதீர் 114.1 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்தார். நைஜீரியாவைச் சேர்ந்த இத்ரிஸ் ரிலுவான் 132.8 புள்ளிகள் பெற்று தங்கம் வெல்ல, மேத்திவ் ஹார்டிங் 131 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.
மகளிர் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றதால், அவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
போலியோ பாதிப்பும் விடாமுயற்சியும்
பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் ஹர்னூட் கிராமத்தில் பிறந்தவர் ஜாண்டு குமார். இவர்களது பெற்றோர்கள் காய்கறி விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார்.
ஜாண்டு குமாருக்கு ஐந்து வயதிலிருக்கும்போதே போலியோ பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் தனது ஆர்வத்தை விடாமல் போராடி வருகிறார். 2010 முதல் 2012 வரை தனது உடல் நலனுக்காக பயிற்சி செய்கிறார்.
தொடக்கத்தில் குண்டு எறிதலில் ஆர்வமாக பங்கேற்று மாவட்ட, மாநில அளவில் பரிசுகள் வென்றுள்ளார். பின்னர், பவர்லிஃப்டிங் மீது ஆர்வம் வந்து இதிலும் அசத்தி வருகிறார்.
நண்பர்களிடம் கடன் வாங்கி இ-ரிக்ஸா வாங்கியிருக்கிறார். ஆனாலும் அதுவும் கரோனா கால்கட்டத்தில் சொதப்பியிருக்கிறது. இருந்தும் விடாமுயற்சியில் தற்போது இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
Jhandu Kumar opens India's account at CWG with men's heavyweight para powerlifting bronze
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.