காமன்வெல்த்: நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர்..! இருமுறை வென்று வரலாறு!
காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து...
கிளாஸ்கோ காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் (27 வயது) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23ல் தொடங்கின. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் நேற்றிரவு பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டருக்கு தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2024ல் முழங்கால் அறுவைச் சிகிச்சையில் இருந்து வெளியே வந்த முரளி ஸ்ரீசங்கர் அபாரமான கம்பேக் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
முன்னாள் உலக சாம்பியன் ஜமைக்காவின் தாஜே கெயில் 8.15 மீட்டருக்கு தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
முன்னதாக, பிர்மிங்கமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் நீளம் தாண்டுதல் பிரிவில் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீ. நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது அதனைவிட 0.01 மீட்டர் அதிகமாக தாண்டியுள்ளார்.
இந்தியர்களிலே முதல்முறையாக ஒருவர் காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்றதில்லை. இந்த வரலாற்றுச் சாதனையை முரளி ஸ்ரீசங்கர் நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக இந்தியாவின் சார்பாக சுரேஷ் பாபு (ஆடவர் வெண்கலம், 1978) அஞ்சு பாபி ஜியார்ஜ் (மகளிர் வெண்கலம், 2002), பிரஜுஸா (மகளிர் வெள்ளி, 2010) பதக்கம் வென்றிருந்தார்கள்.
Commonwealth Games 2026: Murali Sreeshankar wins silver, becomes India’s first double medallist in long jump
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.