FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கேரளம் பெருமைக் கொள்கிறது..! வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு வி.டி. சதீசன் வாழ்த்து!

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் வி.டி. சதீசன் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர் குறித்து கூறியிருப்பதாவது...

Updated On : 30 ஜூலை 2026, 5:43 pm IST
முரளி ஸ்ரீசங்கர், வி.டி. சதீசன். - படங்கள்: பிடிஐ, வி.டி. சதீசன்.
பகிர்:

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் வி.டி. சதீசன் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர் குறித்து, “கேரளம் மிகுந்த பெருமையடைகிறது” எனக் கூறியுள்ளார்.

கிளாஸ்கோ காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் (27 வயது) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

முரளி ஸ்ரீசங்கர் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிர்மிங்கமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கேரள மாநில முதல்வர் வி.டி. சதீசன் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:

எங்களுடைய முரளி ஸ்ரீசங்கர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காமன்வெல்தில் இது அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கேரளத்தின் விளையாட்டு மரபுக்கு மற்றுமொரு தங்கமான அத்தியாயத்தைச் சேர்த்துள்ளார். ஸ்ரீசங்கருடன் தொலைப்பேசியில் பேசினேன். அவரது அசாத்தியமான சாதனைக்கு வாழ்த்துகள் கூறினேன். நாங்கள் பேசும்போது அவர் நம்முடைய கேரள மாநில விளையாட்டை மேலும் பலப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

நமது மாநில அரசாங்கம் முழுக் கவனத்துடன் செயல்பட்டு அதற்கு முடிந்தளவுக்கு முன்னுரிமை அளிப்போம் எனக் கூறினேன். கேரளம் உங்களது மன உறுதி மற்றும் அற்புதமான சாதனையினால் மிகுந்த பெருமை கொள்கிறது ஸ்ரீசங்கர் எனக் கூறினார்.

summary

Keralam is immensely proud of your grit and outstanding achievement, Sreeshankar says VD Satheesan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments