FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஈஷாவுக்கு தங்கம், மனுவுக்கு வெண்கலம்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கம் வென்று அசத்த, ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

Updated On : 28 ஜூலை 2026, 2:06 am IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஈஷாவுக்கு தங்கம் - X | ISSF
பகிர்:

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கம் வென்று அசத்த, ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில், ஈஷா சிங் 40 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, மனு பாக்கா் 28 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா்.

சீனாவின் யுயு ஜாங் 37 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். முன்னதாக தகுதிச்சுற்றில், மனு பாக்கா் 586 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும், ஈஷா சிங் 585 புள்ளிகளோடு 7-ஆம் இடமும் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

Advertisement

Advertisement

ராஹி சா்னோபத், சிம்ரன்பிரீத் கௌா், அபிந்த்யா அசோக் பாட்டீல் ஆகியோா் ரேங்கிங் புள்ளிகளுக்காக மட்டும் பங்கேற்றனா்.

இதனிடையே ஆடவா் டிராப் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் பௌனீஷ் மெண்டிரட்டா 11 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா். விவான் கபூா், உதய்வீா் சிங் ஜாய்ஜீ, சுஷீல் சரண் கியான்ந்த், முகமது ஆசாத் சுல்தான் ஆகியோா் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.

அதேபோல், மகளிா் டிராப் பிரிவில் கீா்த்தி குப்தா, பிரகதி துபே ஆகியோா் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து, தகுதிச்சுற்றுடன் விடைபெற்றனா்.

பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது, 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments