FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

குத்துச்சண்டை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ப்ரீத்தி பவார்..! தங்கம் வெல்வாரா?

காமன்வெல்த் குத்துச்சண்டை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் குறித்து...

Updated On : 31 ஜூலை 2026, 5:17 pm IST
அரையிறுதிப் போட்டியில் வென்ற ப்ரீத்தி பவார். - RaviChoudhary
பகிர்:

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டையில் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்தியா இதுவரை இந்த காமன்வெல்த் தொடரில் 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளன.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ப்ரீத்தி பவார் 54 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் ஜிம்பாப்வேயின் கேத்தரின் ம்வாபே உடன் மோதினார்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் ஐந்து நடுவர்களின் மதிப்பெண்களும் ப்ரீத்தி பவாருக்கு ஆதரவாகவே வழங்கியதால், 5-0 என்ற அபார வெற்றியைப் பதிவு செய்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இறுதிப் போட்டியில் ஆக.1ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோ உடன் மோதவிருக்கிறார். இது குறித்து ப்ரீத்தி கூறியிருப்பதாவது:

நான் தயாராகியிருந்தது போலவே செய்து முடித்ததுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் எனது சிறந்த செயல்பாட்டை வழங்கி தங்கம் வெல்ல முயற்சிப்பேன். எதிராளியைக் குறைவாக மதிப்பிட மாட்டேன் என்றார்

summary

CWG Boxing: Preeti Pawar through to finals with dominating win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments