போர் காரணமாக ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தள்ளிவைப்பு!
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது பற்றி...
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் போர் காரணமாக தள்ளி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 14 முதல் 18 வரை நடைபெறவிருந்தன.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நடக்கும் போர் காரணமாகப் போட்டிகளைத் தள்ளிவைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
நிலைமை சீரடைந்தால் செப்டம்பர் மாதத்தில் போட்டிகளை நடத்த பரிசீலனை செய்வதாக பாகிஸ்தான் ஸ்குவாஷ் ஃபெடரேஷன் தெரிவித்துள்ளது.
இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் அணிகள் பற்றிய விவரங்களை கண்டம் சார்ந்த அமைப்பு கையாள்வதாகவும், இந்தியா கலந்துகொள்ளுமா என்பது பற்றிய தகவல்கள் அந்த அமைப்புக்கே தெரியும் என்று பாகிஸ்தான் ஸ்குவாஷ் ஃபெடரேஷன் அதிகாரி தெரிவித்தார்.
மேலும், போட்டிகளை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டபோது பங்கேற்கும் அனைத்து அணிகளின் பாதுகாப்பிற்கும் தாங்கள் உத்தரவாதம் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
Asian Team Squash Championship postponed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.