நார்வே செஸ்: மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
நார்வே செஸ் தொடரின் 3-வது சுற்றில் உலகின் முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
நார்வே செஸ் தொடரின் 3-வது சுற்றில் உலகின் முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், செஸ் தொடர்களிலேயே மதிப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது, செஸ் உலகின் விம்பிள்டன் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான தொடர் மே 25 தொடங்கி ஜூன் 10 அன்று முடிவடைகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 6 பேர், பெண்கள் பிரிவில் 6 பேர் என மொத்தம் 12 பேர் பங்குபெற்றுள்ள நிலையில் குகேஷ், பிரக்ஞானந்தா, கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் என இந்தியாவிலிருந்து 4 வீரர்கள் விளையாடுகின்றனர்.
Advertisement
Advertisement
இந்தியாவின் திவ்யா தேஷ்முக உலக சாம்பியனான ஜூ வென்ஜூனை 2-வது ஆட்டத்தில் தோற்கடித்து ஆச்சரியப்படுத்தினார். நார்வே செஸ் தொடரில் திவ்யா விளையாடுவது இதுவே முதல்முறை.
இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். மற்றொரு தமிழக வீரர் குகேஷ் 4-ம் இடத்தில் உள்ளார்.
அதேபோல, பெண்கள் பிரிவில் திவ்யா 2-ம் இடத்தில் உள்ளார். கோனேரு ஹம்பி 6-ம் இடத்தில் உள்ளார்.
இத்தொடரில், மாக்னஸ் கார்ல்சன் குறைந்த புள்ளிகளுடன் (1.5) 6-ம் இடத்தில் இருக்கிறார்.
Norway Chess: Praggnanandha beats Magnus Carlsen
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.