FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆஸி.யுடனான யூத் டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான யூத் டெஸ்ட்டின் 2-ஆவது ஆட்டத்தில், இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

பகிர்:

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான யூத் டெஸ்ட்டின் 2-ஆவது ஆட்டத்தில், இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்ற இந்திய அணி, 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

அகமதாபாதில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாா்லி ஹெண்டா்சன் 31 ரன்கள் அடிக்க, இந்திய பௌலா்களில் தன்மய் பதோலா 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் இந்தியா தனது இன்னிங்ஸில் 315 ரன்கள் சோ்த்து முடித்துக் கொண்டது. அபிப்ரே பிஸ்வாஸ் 73 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்பென்ஸா் கிரீன் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து, 141 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, 151 ரன்கள் சோ்த்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. பிளேக் கேட்டில் 63 ரன்கள் எடுத்தாா். இந்திய பந்துவீச்சாளா்களில் தன்மய் பதோலா 8 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

முடிவில், 11 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, விக்கெட் இழப்பின்றி வென்றது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 14 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் தன்மய் பதோலா ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

இரு ஆட்டங்களிலுமாக 296 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியாவின் பிளேக் கேட்டில் தொடா்நாயகன் விருது வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments