50 ஆண்டுகளில் முதல்முறையாக சொந்த மண்ணில் தோல்வியுற்ற மான்செஸ்டர் யுனைடெட்!
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் 50 ஆண்டுகால வரலாற்றில் மோசமான தோல்வி குறித்து...
இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது சொந்த மண்ணில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் அதிக முறை (13) கோப்பை வென்ற அணியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இந்த அணி மோசமாக விளையாடி வருகிறது.
ஆங்கிலக் கால்பந்து லீக் கோப்பை எனப்படும் கராபாவ் கோப்பையில் மான்செஸ்டர் யுனைடெட் தனது சொந்த மண்ணில் (ஓல்ட் டிராஃபோர்ட்) பிரைடன் உடன் மோதியது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் யுனைடெட் அணி முதல் பாதியில் 8,10ஆவது நிமிஷங்களில் கோல்கள் அடிக்க, பிரைடன் முதல் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45+1) கோல் அடிக்க, யுனைடெட் 2-1 என முன்னிலைப் பெற்றது.
இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த பிரைடன் 65, 70ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 3-2 என வென்றது. பிரைடன் அடித்த 15 ஷாட்டுகளில் ஐந்து முறை இலக்கை நோக்கி அடித்தது.
முதலில் 2-0 என இருந்து, பின்னர் தோல்வியுற்றது என்பது மான்செஸ்டர் யுனைடெட்டின் 50 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓல்ட் டிராஃபோர்ட் திடலில் 145 போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 143 முறையும் வென்றுள்ளது. அதில் ஒரு முறை டிராவும் தற்போது ஒரு முறை தோல்வியும் சந்தித்துள்ளது
மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள் கோபத்தில் ஆபாசமான வார்த்தைகளைக் கூறி வசைபாடினார்கள். கடந்த சீசனில் ரூபன் அமோரியம் தலைமையிலும் முன்னேற்றம் இருந்தாலும் பெரிய வெற்றிகள் இல்லாததால் அவர் ராஜிநாமா செய்தார்.
இந்த தோல்வியினால் மான்செஸ்டர் யுனைடெட் அணி கராபாவ் கோப்பையில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
Manchester United 2-3 Brighton: Michael Carrick's side collapse from 2-0 up to exit Carabao Cup at the first hurdle once again
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.