ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு: திருநாவுக்கரசர் அறிவிப்பு!
விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
சென்னை: விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானதால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதேபோல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தி.மு.க.வு.க்கு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.