அமைச்சர் செல்லூர் ராஜூ தாயார் மறைவுக்கு மு.க.அழகிரி நேரில் அஞ்சலி
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90), அண்மையில் காலமானார்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90), அண்மையில் காலமானார்.
இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி வியாழக்கிழமை நேரில் சென்றார். அங்கு செல்லூர் ராஜூவின் தாயார் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசியதாவது: நீங்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை. செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே வந்தேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.