FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெண்ணைத் தாக்கிய முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கைது

பெரம்பலூரில் வாங்கிய பணத்தை திரும்பத் தராத அழகு நிலைய பெண் உரிமையாளரைத் தாக்கிய முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினரை பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


பெரம்பலூரில் வாங்கிய பணத்தை திரும்பத் தராத அழகு நிலைய பெண் உரிமையாளரைத் தாக்கிய முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினரை பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் முத்து நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் செல்வக்குமார் (46), மாவட்ட முன்னாள் ஊராட்சி உறுப்பினர் (திமுக). பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சத்யா (40), பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அழகு நிலையம் வைத்துள்ளார். 
இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம் இருந்ததாம். இதன் அடிப்படையில் செல்வக்குமாரிடமிருந்து வாங்கிய ரூ. 5 லட்சத்தை சத்யா திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து, கடந்த ஆக. 17-ல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் சத்யாவை தாக்கினார். 
இதுகுறித்து சத்யா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சத்யாவின் அழகு நிலையத்தில் வைத்திருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விடியோ பதிவுகள் தொலைக்காட்சிகளிலும் வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்டன. 
இதையடுத்து, பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்து, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச்சிறையில் அடைத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments