மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை: முதல்வருடனான சந்திப்பு குறித்து பொன்னார்
மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை: நடத்தியதாக சந்திப்பு குறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை: நடத்தியதாக சந்திப்பு குறித்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வியாழனன்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
முதல்வரைச் சந்தித்து அவருக்கு விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகளை தெரிவித்தேன். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றிய நீதிமன்ற உத்தரவையொட்டி ஆளுநர் பன்வாரிலால் ஆலோசித்து முடிவு செய்வார். அவரது ஆலோசனை குறித்து யாரும் எதுவும் கருத்து சொல்ல முடியாது.
Advertisement
Advertisement
முதல்வரிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினேன். விரைவில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவின்போது, அந்த மாவட்டத்திற்கு என தனிப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.