கிராம சபைக் கூட்டம்: அரசுக்கு இறுதி அவகாசம்
கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் அளித்துள்ளது.
கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் அளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisement
Advertisement
ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் பதில் மனு இல்லாமலேயே வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அரசுக்கு இறுதி அவகாசம் அளித்தைத் தொடர்ந்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.