கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்: புதிய மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்
திருப்பூர் மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று புதியதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று புதியதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வந்த க.சிவகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த கிராந்திகுமாரை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக கிராந்திகுமார் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Advertisement
Advertisement
இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதன்பிறகு மாநகராட்சி பகுதி பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படத்தன்மையுடன் செயல்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.