FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65. 

28 ஜனவரி 2024, 9:49 am IST
பகிர்:

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65. 


திருவாரூர் மாட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

1985ஆம் ஆண்டு வெளியான 'சிறை' திரைப்படத்தில் ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் பிறைசூடன். 

Advertisement

Advertisement

கேளடி கண்மணி, இதயம், பணக்காரன், அமரன், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். 

மேலும், 5000க்கும் அதிகமான பக்திப் பாடல்களும், 100 தொலைக்காட்சித் தொடர்களுக்கான பாடல்களையும் எழுதிய பெருமைக்கு உரியவர்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசைப்பாளர்களுடன் பணியாற்றியவர் பிறைசூடன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தாயகம், என் ராசவின் மனசிலே படத்திற்காக தமிழக அரசின் விருது பெற்றுள்ளார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments