FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் 13-ம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா

கோவையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோயிலில் 13ஆம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 26 ஏப்ரல் 2022, 4:02 pm IST
பகிர்:

கோவையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோயிலில் 13ஆம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம், கோவை புதூர் பகுதியில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோவில் குண்டம் திருவிழா கடந்த 19 ஆம் தேதி  கொடியேற்றுதல், காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. 

தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், குருதி பூஜை, சண்டி பூஜையைத் தொடர்ந்து, அபிஷேக ஆராதனைகள் உடன் குண்டம் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பிரத்தியங்கார தேவி ஹோமம் நடைபெற்றது. பின்னர் நாக பிள்ளையார் கோயிலிலிருந்து, பட்டு, படைக்கலன் உடன் அம்மன் புறப்பாடு விழாவைத் தொடர்ந்து, இறுதி நாளான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

கோவில் நிர்வாகி சித்தர் சாமி எனும் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், கோவை புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், அக்னி சட்டி, பால்குடம், காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பக்தர்கள் 9 அடி மற்றும் 11 அடி நீள வேல்களை அலகு குத்தி பக்தியுடன் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. தாழத் தட்டுகளுடன், அம்மன் ரத ஊர்வலம் நடந்தது.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் அம்மனை பார்த்து வணங்கியபடியே குண்டம் இறங்கினர். பக்தர்கள் வழிபாடுகளின் இடையில், இரண்டு குதிரைகளும் குண்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments