FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாண்டஸ் புயல்...  கரூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 பிப்ரவரி 2024, 4:33 pm IST
பகிர்:

மாண்டஸ் புயல் காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கவுள்ள நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

Advertisement

Advertisement

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் நிலைகொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த நிலையில் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. அந்தவகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கவுள்ள நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.9) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments