தமிழ்நாடு

கடலில் மூழ்கிய விசைப்படகு: 11 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் விசைப்படகு பாறையில் கட்டியதைத் தொடர்ந்து கடலில் மூழ்கியது. இதனையடுத்து படகில் இருந்த 11 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

DIN

நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் விசைப்படகு பாறையில் கட்டியதைத் தொடர்ந்து கடலில் மூழ்கியது. இதனையடுத்து படகில் இருந்த 11 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கு சொந்தமாக இழுவை வலை விசைப்படகு உள்ளது. இந்த படகின் மதிப்பு ரூ.80 லட்சம். இந்தப் படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த 1-ம் தேதி தருவையை சேர்ந்த வினி என்ற மீனவர்  தலைமையில் ஆழ் கடலுக்கு  சுமார் 11 மீனவர்களுடன்  கடலுக்குள் சென்றுள்ளனர். 

நேற்று மீன் பிடித்து விட்டு சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடல் பகுதியில் கரையில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் விசைப்படகு வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடலில் இருந்த பாறையில் பயங்கரமாக மோதியது. 

இதில் விசைப்படகின் அடிப்பகுதி சேதமடைந்து என்ஜின் இருக்கும் பகுதியில் கடல் நீர் புகுந்தது. இதனால் விசைப்படகில் இருந்த மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.  இடிந்தகரை மீனவர்களுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விரைந்து வந்து விசைப்படகில் இருந்த 11 மீனவர்களை மீட்டனர். 

அதற்குள் விசைப்படகு 95 சதவீதம் கடலுக்குள் மூழ்கி விட்டது. அதில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது. இதே போல் அவர்களுக்கு சொந்தமான ஏராளமான வலைகளும் கடலில் மூழ்கியது. தற்போது 95 சதவீதம் கடலில் மூழ்கியுள்ள விசைப்படகை மீட்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து இழுவை விசைப்படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. 

அதன் மூலமாக மூழ்கிய விசைப்படகை மீட்க தேவையான நடவடிக்கைகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT