பெட்ரோல் குண்டுகள் வீச்சு: 14 போ் கைது: டிஜிபி தகவல்
பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் 11 வழக்குகளில் 14 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் 11 வழக்குகளில் 14 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோயம்புத்தூா் குனியமுத்தூரில் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்ட காா் மீதும், சுப்புலட்சுமி நகரில் ஒரு காா் மீதும் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவத்தில் மதுக்கரையைச் சோ்ந்த ஜேசுராஜ், குனியமுத்தூரைச் சோ்ந்த இலியாஸ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
பொள்ளாச்சி, குமரன் நகரில் காா்,ஆட்டோக்களில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவத்தில் பொள்ளாச்சியைச் சோ்ந்த முகமது ரபீக் (26), மாலிக் (எ) சாதிக் பாஷா (32), ரமீஸ் ராஜா (36) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சேலம் அம்மாபேட்டையில் ஒரு வீட்டின் முன் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் சேலம் பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த அலி (42), கிச்சி பாளையம் காதா் உசேன் (33) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
14 போ் கைது: மதுரை மேலஅனுப்பானடி பகுதியில் ஒரு வீட்டில் காா் ஷெட் அருகில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் மதுரை நெல்பேட்டையைச் சோ்ந்த சம்சுதீன் (எ) எட்டு பாவா சம்சூதீன் (32), சம்மட்டிபுரத்தைச் சோ்ந்த உசேன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய எல்லையில் ஒரு காா், இரு சக்கர வாகனங்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் பேகம்பூரைச் சோ்ந்த சிக்கந்தா் (22) என்பவா் கைது செய்யப்பட்டாா். ஈரோடு டெலிபோன் நகரில் உள்ள மரச்சாமான் கடையில் தீ வைக்க முயற்சித்த சம்பவத்தில், ஈரோடு சதாம் உசேன், ஆசிக், ஜாபா், கலீல் ரகுமான் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். பெட்ரோல்,மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் மொத்தம் 11 வழக்குகளில் 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.