கோவையில் பீஸ்ட் திரைப்படம் வெளியீடு..! விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..!
கோவையில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
கோவை: கோவையில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடித்த இந்த படத்தில் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி திரையரங்கு.
Advertisement
Advertisement
இந்நிலையில், இன்று நாடு முழுவதும் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி திரையரங்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நள்ளிரவு முதல் குவிந்த விஜய் ரசிகர்களின் பட்டாளமே சிறிய பேனர் வைத்து, விஜயர் பேனருக்கு மாலைகள் இட்டு, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி ஆரவாரமாக கொண்டாடினர்.
இதையும் படிக்க | விஜய்யின் 'பீஸ்ட்' - திரை விமர்சனம் - நெல்சனுக்கு என்னாச்சு?
கேஜி திரையரங்கிற்கு விஜய் பீஸ்ட் திரைப்படம் படம் பார்க்க வந்தவர் ரசிகர்கள் கொடுத்த கேக்கை குழந்தைக்கு ஊட்டினார்.
இந்த உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்று திரைப்படத்தை வரவேற்றனர்.தொடர்ந்து காலை 4 மணி அளவில் குழந்தைகள், குடும்பத்தினர், இளைஞர்கள் என திரண்டு படம் பார்க்க வந்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.