FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மனு இன்று விசாரணை

அதிமுக தலைமை அலுவலக விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது.

1 பிப்ரவரி 2024, 3:36 pm IST
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
பகிர்:

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.

உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்றபோது, அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

இந்த நிலையில், கட்சித் தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் கடந்த ஜூலை 20-ஆம் தேதி அளித்த உத்தரவில், "அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் வருவாய்த் துறை ஒப்படைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி கே.பழனிசாமியும் இந்த மேல் முறையீட்டு விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், ஓபிஎஸ்ஸின் மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.

முன்னதாக, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில், பொதுக்குழு செல்லாது எனவும், இபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள அதிமுக அலுவலக வழக்கு, அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments