அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர்: சசிகலா
அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர் என்று வி.கே. சசிகலா கூறியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர் என்று வி.கே. சசிகலா கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண நிகழ்வில் வி.கே.சசிகலா திங்கள்கிழமை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதே கேள்விக்குறியாக உள்ளபோது, ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது எப்படிச் செல்லும்?
Advertisement
Advertisement
இதையும் வாசிக்கலாம்: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியிட முடியும்?
பொதுக்குழுவில் பொருளாளரே நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆகையால், பொதுக்குழுக் கூட்டம் நடந்ததே செல்லாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள், கலவரம் செய்து, பதவியைப் பிடிக்கும் சுயநலக் குழுக்களாக செயல்படமாட்டார்கள்.
அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் என்னையே ஆதரிக்கின்றனர். விரைவில், கட்சியிலிருந்து வெளியில் சென்றவர்கள், அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரே தலைமையின் கீழ் கொண்டுவந்து, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.