முகப்பு
தமிழ்நாடு

அதிமுக பொதுக் குழு நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி கிரீடம், வீரவாள்

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று காலை தொடங்கிய அதிமுக பொதுக் குழு, அடுத்த பொதுக் குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டதுடன் நிறைவு பெற்றது.

Updated On : 23 ஜூன் 2022, 5:38 pm IST
பகிர்:


சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று காலை தொடங்கிய அதிமுக பொதுக் குழு, அடுத்த பொதுக் குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டதுடன் நிறைவு பெற்றது.

அதிமுகவின் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை பொதுக் குழுவில் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் பலரும் பூங்கொத்துகளையும், மலர்மாலைகளையும் அறிவித்து தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளிக் கிரீடமும், வீரவாளும் வழங்கப்பட்டது. 

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம், ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூலை 11ஆம் தேதி  நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

Advertisement

Advertisement

இந்த அறிவிப்புக்கிடையே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மேடையிலிருந்து இறங்கி, கூட்டத்திலிருந்து வெளியேறினர். 

பிறகு, மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று அறிவித்தார். 

கடுமையான எதிர்பார்ப்புகளுடன் இன்று முற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கிய அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சலசலப்பு, கோஷங்கள், எதிர் கோஷங்கள், நிராகரிப்பு, ஆதரவு என சுமார் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments