FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி! நடந்தது என்ன?

குஷ்பு உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த நடிகைகளை திமுகவின் சைதை சாதிக் மோசமாகப் பேசிய நிலையில், குஷ்புவிடம் கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார்

Updated On : 28 அக்டோபர் 2022, 9:14 am IST
பகிர்:

குஷ்பு உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த நடிகைகளை திமுகவின் சைதை சாதிக் மோசமாகப் பேசிய நிலையில், குஷ்புவிடம் கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார். 

திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக், நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோர் குறித்து மிகவும் கீழ்த்தரமாக பேசும் ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்,  'ஆண்கள் பெண்களை தவறாக வசைபாடும்போது, அது அந்த ஆண்களின் வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள், தாங்கள் கருணாநிதியைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடலா? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

இதற்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்து குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது பதிவில், ''ஒரு பெண்ணாகவும், ஒரு மனுஷியாகவும் திமுக நிர்வாகி சைதை சாதிக் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், எந்த இடத்தில் சொன்னாலும் எந்த கட்சியைச் சேர்ந்தவரானாலும் இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. திமுக தலைவரும் கட்சியும் இதை மன்னிக்காததால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

கனிமொழியின் மன்னிப்புக்குப் பதில் அளித்துள்ள குஷ்பு, மிக்க நன்றி கனிமொழி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் எப்போதும் பெண்களின் கண்ணியம், சுயமரியாதைக்காக எப்போதும் துணைநிற்கும் ஒருவராக இருக்கிறீர்கள். பணிகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments