FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா பந்தல்கால் முகூர்த்தம்

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 பிப்ரவரி 2023, 11:42 am IST
தேரடிக்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர்.
பகிர்:

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் தேர், ஆசியாவிலேயே பெரிய தேராக விளங்குகிறது. 

ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும்.

Advertisement

Advertisement

பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் தைப்பூசத் திருவிழாவில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் தைப்பூச நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வன்மீகநாதர், தியாகராஜர், வாதாபி கணபதி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, அனிக்கை வாங்கப்பட்டது. பின்னர், ருணவ விமோட்சனரிடத்தில் கலசங்கள் வைத்து, பூஜைகள் செய்தபின், சிறிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, முகூர்த்த விநாயகரிடம் பந்தல் கால் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெற்றது. மேள, தாளங்கள் முழங்க தேரடிக்கு வந்த திருஞானசம்பந்தர் முன்னிலையில், 5 தேருக்குரிய கால்களுக்கு பூஜைகள் செய்து, தீபாராதனைக் காட்டப்பட்டது. 

பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சியைக் காண திரளான பக்தர்கள், கரோனா வழிமுறைகளை பின்பற்றி திரண்டிருந்தனர். பின்னர், அங்கிருந்து கமலாலயக்குளத்துக்கு வந்த அஸ்திரதேவர், திருஞானசம்பந்தர் முன்னிலையில் தீர்த்தவாரி வழங்கினார். இதைத்தொடர்ந்து, திருஞானசம்பந்தர், நான்குகால் மண்டபத்துக்கு எழுந்தருளினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் அலுவலர்கள் செய்திருந்தனர்.

இவ்விழாவுக்கான பெரிய கொடியேற்றம் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவார் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகையை வாசித்து, பங்குனி ஆயில்யமான ஏப்.1 ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறும் என்பதை முறைப்படி அறிவிப்பு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments