FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள்: ஜெயக்குமார்

செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 21 ஜூன் 2023, 3:14 pm IST
பகிர்:

செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த ஒன்றை கூட இந்த அரசாங்கம் நிறைவேற்ற வில்லை.  துறை இல்லாததற்கு எதற்கு அமைச்சர். இதனால் மக்களுடைய வரிப்பணம் தான் வீணாகிறது.

Advertisement

Advertisement

அன்றைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம் என சொல்லிவிட்டு  இப்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதை கட்சியினுடைய தூண்டுதலின் பெயரில் நடக்கிறது என்றால் எப்படி. மக்கள் முன்னணியில் இதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இன்று ஜனநாயக ரீதியான இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் விடியோ பதிவு வெளியிட்டு இருக்கிறார்.  அதிமுகவினர் மீது திமுக எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும் அதை நீதிமன்றத்தின் மூலம்  முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயார்.

செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள். மக்கள் பிரச்சனைக்காக அதிமுக எதிர்த்து போராடி வருகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments